சந்தியாவை நிற்க வைத்து கேள்வி கேட்ட சிவகாமி.. சந்தியா எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் தன்னுடைய அம்மாவிடம் ஹால் டிக்கெட் வராது பற்றி வருத்தத்தோடு பேசிக் கொண்டிருக்க போஸ்ட்மேன் வீட்டில் கொடுத்து விட்டதாக சொல்கிறார் நீங்க எங்கேயாவது பார்த்தீர்களா என கேட்க சிவகாமி என்னை சந்தேகம் பாத்தியா என கேட்கிறார். ஐயோ அப்படி கேட்கலாமா எங்கேயாவது சுருக்கி வச்சிருக்காங்களான்னு பாத்தீங்களா எனக் கேட்டேன் என கூறுகிறார்.

இன்னொரு பக்கம் சந்தியா எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது நான் யாருக்கு என்ன தப்பு பண்ணேன் என சரவணனிடம் அழுது புலம்புகிறார். மறுநாள் காலையில் ஆபீசுக்கு சென்று இது குறித்து விசாரிக்கலாம் என சரவணன் கூறுகிறார்.

மறுநாள் காலையில் ஆதி தனது காதலி ஜெஸியை ரோட்டில் சந்தித்து பேசுகிறார். அப்போது அர்ச்சனா பார்த்து விட அங்கிருந்து ஆதி எஸ்கேப்பாக முயற்சி செய்ய அவர்களை தடுத்து நிறுத்தி என்னை ஏது என விசாரிக்க இருவரும் காதலிப்பதாக ஆதி கூறுகிறார். ஆனா அவ கிறிஸ்டின் அதனால நம்ம வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு பயமா இருக்கு என ஆதி சொல்கிறான். உங்க ரெண்டு பேரையும் நான் சேர்த்து வைக்கிறேன் அத்தை கிட்ட நான் பேசுறேன் என அர்ச்சனா வாக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து ஜெஸ்ஸி பணக்கார வீட்டு பெண் போல இருக்கிறது‌. வேறு மதம் வேற அந்த பெண்ணை ஆதிக்கு கட்டி வைத்து விட்டால் அத்தை அவமானம் தாங்காமல் அமைதியாகி விடுவார். ஆதியுடன் சேர்த்து வைத்ததால் ஜெசி காலம் முழுக்க என் காலடியில் கிடப்பா. அதனால் அவளை வைத்து சந்தியாவின் கொட்டத்தை அடக்கலாம் என அர்ச்சனா திட்டம் போடுகிறார்.

மறுநாள் காலையில் சிவகாமி அனைவரையும் ஒன்றாக கூப்பிட்டு உங்கப்பா என்கிட்ட வந்து ஹால் டிக்கெட் பத்தி கேட்கிறார் நீ ஹால் டிக்கெட் பார்த்தீர்களா என்று கேட்கிறேன் அப்போ எல்லோரும் என்னை சந்தேகப்படுறீங்களா? என்ன அர்த்தம் என கேட்கிறார். பிறகு சந்தியாவிடம் சில கேள்விகளை கேட்க போவதாக சொல்லி இன்னமும் போலீசாக வேண்டும் என்ற உறுதியோடு தான் இருக்கிறியா எனக் கேட்க அது என்னுடைய லட்சியம் என் அப்பா அம்மாவோட கனவு என சந்தியா கூறுகிறார். பிறகு சிவகாமி போலீஸ் வேலை என்றால் இரவு பகல் பார்க்காமல் ஓட வேண்டும் குடும்பத்தை கவனிக்க முடியாது. இந்த ஊருக்கு நாங்க வந்தபோது பெரிய வசதி எல்லாம் கிடையாது நாலு பிள்ளைகளை பெற்றெடுத்து நான் தான் எல்லா வீட்டு வேலையும் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். புருஷன் வேலை செய்து வீட்டிற்கு வரும்போது பணத்துக்காக நான் வேலைக்கு போயிட்டா என் நாலு பிள்ளைகளுக்கு யாரும் சோறாக்கி போடறது? அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும். நீ வேலைக்கு போயிட்டா என் புள்ள சரவணனுக்கு இதையெல்லாம் எப்படி செய்ய முடியும் என கேட்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

சந்தியா சொல்லப்போகும் பதில் என்ன சிவகாமி எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

raja rani 2 serial episode update 09-08-22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

5 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

5 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

8 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

8 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

8 hours ago