சந்தியா மீது பழி போட்ட அர்ச்சனா கடுப்பான சரவணன்… சிவகாமி எடுக்கும் முடிவு – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அர்ச்சனா வீட்டில் உள்ள அனைவரிடமும் சிக்கிக் கொண்டதை அடுத்து அவருடைய தங்கச்சி ப்ரியா பெயரில்தான் புகார் பதிவானது சிவகாமி சொல்ற அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே நீங்க சொல்றது எல்லாமே பொய் பொய் பொய் என சத்தம் போடுகிறார். இது எல்லாத்துக்கும் பின்னாடி இந்த சந்தியா தான் இருக்கா. இந்த வீட்டில பொலீஸ்ல பெரிய பெரிய ஆள் உங்களுக்கு தெரிஞ்ச ஆளு சந்தியா தான் எல்லாருக்கும் தெரியும். அவதான் இது எல்லாத்துக்கும் காரணம் அவர்தான் என் பேர்ல இப்படி ஒரு பொய்ய சொல்ல சொல்லி இருக்கா என்ன சொல்ல சரவணன் அடிக்க பாய்கிறார்.

அதன்பின்னர் பார்வதி அப்போ உங்க அம்மா ஹாஸ்பிடல் இருக்காங்கன்னு சொன்ன விஷயம் உண்மையா என கேட்க அம்மா சத்தியமா உண்மை என சொல்கிறார். சரியாக இந்த நேரத்தில் அர்ச்சனாவின் அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வருகின்றனர். அர்ச்சனா ஏன் அவர்கள் கூப்பிடும் குரலைக் கேட்டு விட்டு எங்க அம்மாவுக்கு ஒரு மாதிரி இருக்கு என சொல்கிறார். பிறகு சிவகாமி அவர்களை உள்ளே வரவேற்பு உங்களுக்கு நெஞ்சு வலி எப்படி இருக்கு உங்களுக்கு நெஞ்சுவலி வந்தது தெரியுமா தெரியாதா என கேட்க எனக்கு நெஞ்சு வலியா என்ன சொல்றீங்க சம்பந்தி என கேட்கிறார்.

உங்க மண்டை உடைஞ்சு ஆபரேஷன் பண்ணாங்களே, அர்ச்சனா கூட ரெண்டு பாட்டில் ரத்தம் கொடுத்தாலே என கேட்க அர்ச்சனாவின் அப்பாவும் என்ன சொல்றீங்க என அதிர்ச்சியாக கேட்கிறார். பிறகு அர்ச்சனாவின் அம்மா நேத்து சந்தியா பிரியாவை பார்த்து இருக்கா. உங்க மேல போலீசில் புகார் கொடுத்த விஷயம் பற்றி கேட்க எல்லாத்தையும் ஒத்துக்கிட்டேன் என வந்து சொன்னான். அதான் உங்கள பார்த்து மன்னிப்பு கேட்டுட்டு போகலாம்னு வந்தோம் என கூறுகின்றனர். இந்தப் பொண்ணு என்ன ஜெயில்ல போட பார்த்து இருக்கா. இந்த குடும்பத்தையே சிதைக்க பார்த்து இருக்கா. குடும்பமா கூட்டா செய்யறது எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி மன்னிப்பு கேட்க வந்திருக்கீங்களா கோபப்படுகிறார். நாங்க செஞ்சதெல்லாம் தப்பு தான் எங்களை மன்னிச்சிடுங்க சம்மந்தி எங்க பொண்ணு மன்னிச்சுக்கோங்க வீட்டைவிட்டு அனுப்பி விடாதீங்க என கெஞ்சுகின்றனர்.

சிவகாமி செந்திலிடம் உன் பொண்டாட்டி என்னை ஜெயிலுக்கு அனுப்ப திட்டம் போட்டது உனக்கு தெரியாதா என் தலைமேல் கைவைத்து கேட்கிறார். செந்தில் அமைதியாகவே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு அவர் அம்மாவின் காலில் விழுந்து சத்தியமா எனக்கு தெரியாது என நம்புங்க அம்மாவையே ஜெயிலுக்கு அனுப்புற அளவுக்கு மோசமான பையன் நான் இல்ல. இந்த விஷயம் மட்டும் அன்னைக்கே தெரிஞ்சிருந்தா நான் அவ கூட சேர்ந்து வாழ்ந்து இருக்கவே மாட்டேன் என செந்தில் சொல்கிறார்.

பிறகு இப்போ என்ன பொய் சொல்ல போற அர்ச்சனா என கேட்க அர்ச்சனா என்னை மன்னிச்சிடுங்க அத்தை நான் செஞ்சது தப்புதான் என அழுகிறார்‌. நான் எதுவும் தெரியாம பண்ணிட்டேன் என கண் கலங்குகிறார். தெரியாம பண்ணிட்டியா இனிமே இந்த வீட்டுல இந்த வீட்டுல நிலை எந்த வீட்டிலேயும் நீ வாழ்வதற்கான தகுதியை இழந்துட்ட. இனிமே இந்த வீட்டுல உனக்கு இடம் கிடையாது வெளியே போ என கூறுகிறார். அர்ச்சனாவின் அப்பா அம்மா அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க இந்த ஒரு முறை மன்னித்து எடுத்துக்கங்க என கெஞ்ச தயவுசெய்து உங்க பொண்ண கூட்டிட்டு போங்க என சிவகாமி கூறுகிறார்.

மேலும் சிவகாமி சந்தியாவிடம் இது எல்லாம் உனக்கு ஏற்கனவே தெரியும் அப்படி இருந்தும் நீ அமைதியாக இருக்க என கேட்க வீட்ல பிரச்சினை வேண்டாம். சரியான நேரமா பாத்து பொறுமையா இந்த விஷயத்தை சொல்லலாம் என்றுதான் இருந்தேன் மறக்கணும்னு நினைக்கல என சந்தியா கூறுகிறார்.

சிவகாமி அர்ச்சனாவை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்ல அப்போது சந்தியா அத்தை எதுவா இருந்தாலும் இந்த நாலு சுவத்துக்குள்ள முடிப்போம். வெளில அனுப்ப வேண்டாம் என கூறுகிறார். தயவுசெய்து நான் சொல்றத கேளுங்க என சொல்லியும் சிவகாமி அர்ச்சனாவை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார்.

செந்தில் அர்ச்சனாவை அடித்து தரதரவென இழுத்துச் சென்று அனைவர் சொல்வதையும் கேட்காமல் வெளியே தள்ளுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 

Raja Rani 2 Serial Episode Update 09.02.22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

10 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

10 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

13 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

13 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

13 hours ago