Raja Rani 2 Serial Episode Update 05.04.22
தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோடில் சிவகாமி பொய் சொல்லிவிட்டு வெளியே சென்றதை கண்டித்து திட்டியதால் சந்தியா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அத்தைகிட்ட உண்மையை சொல்லி விடுவேன் என்று நினைச்சேன் ஆனா ஏன் சொல்லல என சந்தியா கேட்டு அதனால்தான் எதை எதையோ சொல்லி மாற்றிவிட்டார். ஒருநாள் உண்மையை சொன்னால் தானே போறோம் அதுவரை காத்திருப்போம். நாளைக்கு போலீஸ் ஆனதும் அம்மா என் மருமகள் என சொல்லி ரொம்ப சந்தோஷப்படுவாங்க என சொல்ல அத்தைக்கு அதைவிட சந்தோஷம் நான் குழந்தை பெற்றுத் தருவதுதான் என சந்தியா சொல்கிறார். மேலும் உங்களுக்கு ஆசை இல்லையா எனக் கேட்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? எனக்கும் ஆசை இருக்கிறது என சொல்ல எப்போது பெற்றுக் கொள்ளலாம் என சந்தியா கேட்கிறார்.
முதலில் உங்களது போலீஸ் கண்டது நிறைவேறட்டும் குழந்தை அதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என சொல்கிறார். இதைக் கேட்ட சந்தியா மிகப் பெரிய தியாகி என கண்கலங்கி அழுகிறார். அதன்பிறகு அர்ச்சனா சாமியாரிடம் சென்று அந்த மருந்து சாப்பிட்டதால் வயிறு வலி வந்தது என்று கூறுகிறார். நீ என் மேல நம்பிக்கை இல்லாமல் இரண்டு மருந்தை சேர்த்து சாப்பிட்டுவிட்டால் உனக்கு மருந்து தர மாட்டேன் என சாமியார் சொல்ல இனிமே அப்படி பண்ண மாட்டேன் உங்களை முழுசா நம்புறேன் என அர்ச்சனா கூறுகிறாள். முன்பு கொடுத்த பணத்தைவிட இந்த முறை அதிகமாக கொடுக்கிறேன் என அர்ச்சனா சொல்ல சாமியார் மருந்து கொடுத்து அனுப்புகிறார்.
சந்தியா சரவணன் வெளியில் சென்றிருந்த நேரத்தில் போலீஸ் கோச்சிங் கிளாசில் சந்தியாவுடன் படிக்கும் 3 தோழிகள் வீடு தேடி வருகின்றனர். சர்க்கரை இடம் வழி கேட்க சர்க்கரை எங்க அண்ணா அண்ணி தான், இதுதான் வீடு என வீட்டை காட்டி அனுப்பி வைக்கிறார். பிறகு சரவணன் அந்த வழியாக வர சர்க்கரை வீட்டிற்கு சந்தியா நீ தேடி அவரது பிரண்ட்ஸ் வந்திருப்பதாகவும் கோச்சிங் கிளாசில் கூட படிப்பதாக சொன்னதாகவும் கூறுகிறார். இதனால் பதறிப்போன சரவணன் வீட்டிற்கு ஓடுகிறார்.
சந்தியா வெளியே போயிருக்காங்க நீங்க போயிட்டு அப்புறம் வாங்க என சொல்ல மயிலு அவர்களுக்கு காபி கொடுத்து உட்கார வைக்கிறார். சிவகாமியின் வந்துவிட யார் என்ன என விசாரிக்க சந்தியாவுடன் கூட படிப்பவர்கள் என கூறுகின்றனர். எங்கே ஏது என அர்ச்சனா பிரச்சினையை உண்டு பண்ண அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்கள் என கூறி சமாளித்து வருகின்றனர். இதனால் சரவணன் ஷாக்காக மயிலு பயப்படாதீங்க ஐயா நான் அவங்க கிட்ட சந்தியா அம்மா கிளாசுக்கு போறத பத்தி சொல்ல வேணாம்னு சொல்லிட்டேன் என கூறுகிறார். இதனால் சரவணன் நிம்மதி அடைகிறார்.
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…