raghava-lawrence-brother-first-movie-update
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவரது நடிப்பில் ருத்ரன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரரான எல்வின் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டைரி பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கும் இப்படத்தில் லாரன்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
சாம் சி எஸ் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாகவும் அப்படபிடிப்பு பணிகள் 40 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எல்வின் ஏற்கனவே லாரன்ஸின் காஞ்சனா 2 திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கிய பாடலில் நடனம் ஆடி வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Bison Kaalamaadan Trailer | Dhruv, Anupama Parameswaran | Mari Selvaraj | Nivas K Prasanna
Gen Z Romeo Video Song | Kambi Katna Kathai | Natty Natraj, Singampuli, Sreerranjini, Shalini
I'm The Guy Lyrical Video | Aaryan | Vishnu Vishal & Shraddha Srinath | Ghibran,…
அருண் சீதாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…