Radha Ravi, Ravi Maria, Nanjil Sampath in a political comedy story
அரசியல் காமெடி கதையில் ராதா ரவி, ரவி மரியா,நாஞ்சில் சம்பத்
நகைச்சுவை மிகுந்த கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்புண்டு. அவ்வகையில் அரசியல் கலந்து எடுக்கப்படும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
கதையின் நாயகர்களாக ராதாரவி, ரவிமரியா நடிக்கும் படத்தை, ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய படங்களைத் தயாரித்து, இயக்கிய ராம்தேவ் இயக்குகிறார்.
இப்படத்தில் கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு, நிழல்கள் ரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தைக் கண்ணகி மைந்தன் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இப்படம் பற்றி இயக்குநர் தெரிவிக்கையில் ‘இது அரசியல் நையாண்டி, காமெடி திரைப்படம். சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
2-ம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தேனியில் தொடங்குகிறது. நான் இயக்கிய ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ படங்கள், 10 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…