தனுஷின் ‘கர்ணன்’-ஐ விட ‘ருத்ர தாண்டவம்’ இருமடங்கு வரவேற்பை பெறும் – ராதா ரவி சொல்கிறார்

ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில், “இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். நாங்கள்‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை.

இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன் ஜி என்னை சந்தித்தார். நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார் அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார். அதன் பின் நடித்தேன்.

இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார். இந்தப் படம் சிறப்பான படம். அனைவருக்கும் பொதுவான படம். படம் 1ஆம் தேதி வெளியான பிறகு, இதுதான் டாக் ஆஃப் த டவுனாக இருக்கும். தனுஷ் நடித்ததால் கர்ணன் படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ருத்ர தாண்டவம் படம் ரிச்சர்ட் நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும் இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்” என்றார்.

Suresh

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

17 hours ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

17 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

17 hours ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

18 hours ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

19 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

20 hours ago