ps2-audio-launch-kamalhaasan-speech,
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல முன்னணி பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இருந்தனர்.
அந்த வகையில் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்த நடிகர் கமல்ஹாசன் உரையாடிய சுவாரஸ்யமான தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில் அவர், இது சோழர்களுக்கு மட்டும் பொற்காலம் அல்ல தமிழ் சினிமாவிற்கும் பொற்காலம் தான் என்று கூறியிருக்கிறார். மேலும் இயக்குனர் மணிரத்தினம் குறித்து பேசுகையில் மணிரத்தினத்தை பார்த்து பொறாமைப்படும் நபர்களில் நானும் ஒருவன், இதில் இயக்குனர் பாரதிராஜா முதல் நபர். இப்படிப்பட்ட அற்புதமான படத்தை இயக்கி விட்டு அமைதியாக அமர்ந்திருக்கிறார் எனக் கூறியிருக்கிறார். இந்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…