Problem with release of master film in Kerala
கொரோனா லாக்டவுன் காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 10 மாதங்களாக தியேட்டர்கள், மூடப்பட்டுள்ளன. இதனிடையே ஜனவரி 5 ஆம் தேதி முதல், 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார். அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில், அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு அரசு செவிசாய்க்காததால் தியேட்டர்களை திறக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை.
இதனால் கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். மலையாள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படங்களுக்கும் கேரளாவில் வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘கராத்தே பாபு’. இதில்…
நடிகர் சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி…
நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்…
இந்திய இலக்கிய உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான ஞானபீட விருதை வென்றுள்ள பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, மத்திய…
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…