Problem with Dhanush's 'Karnan' movie title
தனுஷின் 41-வது படம் ‘கர்ணன்’. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். தாணு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.
இந்நிலையில் ‘கர்ணன்’ பட தலைப்பை பயன்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷூக்கு சிவாஜி நலப்பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவாஜி நலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்ணன் என்று சொன்னதும் நடிகர் திலகம் நடித்த திரைப்படம் தான் நினைவுக்கு வரும். சட்டப்படி ஏற்கனவே வெளிவந்த படத்தின் பெயரை வைக்கலாம் என்றாலும், நியாயப்படி அதை தவிர்ப்பது நல்லது.
‘கர்ணன்’ என்றாலே கொடுப்பவன். கொடைவள்ளல்தான். உங்கள் படத்தில் உரிமைக்காகப் போராடும் ஒருவன். அதனால் ஒரு சமூகத் திரைப்படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
இது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக்கூடும். எனவே படத்தின் தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…