Priya Bhavani Shankar joins Simbu in the film
`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர், கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவர் தாசில்தாராக நடிக்கிறாராம். அவர் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இது கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மப்டி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் கதைப்படி சிம்புவுக்கு ஜோடி இல்லை. ஆதலால் நடிகை பிரியா பவானி சங்கர் பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash