pranitha subhash baby photo
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதையடுத்து தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் பிரணிதா அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நித்தின் ராஜு என்பவரை கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதியில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். அப்போது கொரோனா வின் இரண்டாவது அலையின் காரணத்தால் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டதால். அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் அவரின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு பிரணிதா தனது கணவரின் பிறந்தநாளன்று தான் கர்ப்பமாக இருப்பதை ‘என் கணவரின் 34 வது பிறந்த நாளில் கடவுள் எங்களுக்கு தந்த வரம்’என்று மகிழ்ச்சியோடு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து தற்போது அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த பிரணிதா சுபாஷ் மருத்துவமனையில் இருந்து குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…