பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
இதற்கிடையில்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்திசெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் வருகிற 18-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது

