Pradeep Ranganathan's 'L.I.K' to release on March 19th?
பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19-ல் ரிலீஸ்?
லவ்டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் பிரதீப். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள எல்ஐகே பட தகவல்கள் பார்ப்போம்..
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, பின்பு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது படக்குழு.
தற்போது மார்ச் 19-ந்தேதி இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மலேசியா உரிமையை பெற்றியிருக்கும் நிறுவனம் மார்ச் 19-ந்தேதி வெளியீடு என குறிப்பிட்டுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில், இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதனை 7 ஸ்கீரின் நிறுவனம் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…