‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியவர் ஆவார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்க உள்ளார்.
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…