poorna-gets-married-to-a-business-man
தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. அதன்பின்னர் கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். பூர்ணா பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
‘குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன்’ என்று அவர் தெரிவித்து இருந்தார். பூர்ணா சமீபத்தில் பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு “எப்போதும் என்னுடையவர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பூர்ணா – ஷானித் ஆசிப் அலி இந்நிலையில் பூர்ணா- ஷானித் ஆசிப் அலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, “சிறப்பு, நான் உலகின் மிக அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல வாழ்க்கைத் துணையின் அனைத்து குணநலன்களையும் பெறாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னைக் குறைவாக உணரவில்லை. பூர்ணா – ஷானித் ஆசிப் அலி நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர நானே உழைக்க என்னை ஊக்கப்படுத்தினீர். இன்று, நம் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நீங்களும் நானும் இந்த அற்புதமான ஒற்றுமை பயணத்தைத் தொடங்குகிறோம்.
பூர்ணா – ஷானித் ஆசிப் அலி இது கொஞ்சம் அதிகம் என்று எனக்குத் தெரியும், இன்ப துன்பத்தில் உங்களுடன் இருப்பேன் என்றும் எப்போதும் உங்கள் அன்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளிக்கிறேன் என பூர்ணா பதிவிட்டுள்ளார்.
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…