ponniyin selvan movie poster update
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் “பொன்னியின் செல்வன்” வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விக்ரம், ஆதித்ய கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், கார்த்தி, வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் மற்றும் திரிஷா, குந்தவை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
தொடர்ச்சியாக இப்படத்தின் அறிவிப்புகளை கொடுத்து வரும் படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஜெயம் ரவி, அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு ஜெயம் ரவியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…