சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார்.
மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். சுமார் 4.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை இரண்டு மடங்கு லாபத்துக்கு பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்றுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே29-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor