தனது ஆசானுக்கு தன்னால் இயன்ற மரியாதையை செலுத்திய மன்சூர் அலிகான்

“சென்னை:விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகன்’ படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்து இருந்தார். இப்படம் மன்சூர் அலிகானுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல படங்களில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கண்டனங்களுக்கும், சர்ச்சையிலும் மாட்டிய மன்சூர் அலிகானின் நேற்றைய செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த மன்சூர் அலிகான் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றார். அங்கு விஜயகாந்த் உடலுக்கு மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்னர், சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக மக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனத்துடன் நடந்து சென்றார். பின்னர் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இரவு கடந்தும் அவரது உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இருக்கிறார் மன்சூர் அலிகான். இன்று காலை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்ட போதும் கூடவே சென்றார். இன்று மாலை விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யும்வரை மன்சூர் அலிகான் இருப்பார். இதன் மூலம் தனது ஆசானுக்கு தன்னால் இயன்ற மரியாதையை அவர் செலுத்துகிறார் என்பதே நிதர்சனம்.”,

people-moved-by actor mansoor-ali-khans-action
jothika lakshu

Recent Posts

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…

14 hours ago

‘அந்நியன்’ போல நடந்த காதலரால் மன உளைச்சல்; காதல் தோல்வி குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…

16 hours ago

‘சிவாஜி’ படப்பிடிப்பில் ரஜினி அளித்த அன்பான வரவேற்பு – ஸ்ரேயா சரண் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…

17 hours ago

நீயெல்லாம் ஒரு ஆக்டரா? – ப்ரீத்தி முகுந்தன் குறித்து அசோக் செல்வன் கலகலப்பு!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…

17 hours ago

சென்னை ஆடம்பர வீட்டைவிட மும்பையின் 1,700 சதுர அடி வீடுதான் மகிழ்ச்சி – சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…

18 hours ago

துல்கர் சல்மானின் ‘I’M GAME’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…

19 hours ago