Latest Tamil cinema News
ஆன்மீகம்

புண்ணியமாக இருந்தாலும், பாவமாக இருந்தாலும், நாம் செய்தது நமக்கே சொந்தம். தெரிந்துகொள்ளலாமா?

1) பாவத்தை விரும்பி செய்பவன் அதன் தண்டனையை அவன் விரும்பாவிட்டாலும் அனுபவித்து முடிக்க நேரிடும்.

2) பாவம் முதலில் கண்களின் மூலம் உருவாகின்றது. கண்கள் சுத்தமானால் அனைத்தும் சுத்தமாகும்.

3) எங்கிருந்து பாவம் உருவாகின்றது என்பதை உற்று நோக்கி கவனித்து விளக்க வேண்டும். யாருடனும் பாவத்திற்கு உடன் படக் கூடாது.

4) யாரையும் பாவம் செய்வதற்கு உடன் படுத்தக் கூடாது. பாவம் செய்வதற்கு ஒருவர் பயந்து நடக்க வேண்டும்.

5) ஒரு பக்கம் பாவம் செய்து கொண்டே இன்னொரு பக்கம் புண்ணியமும் செய்தால் ஒரு நாள் சேர்த்து வைத்த பாவம் அனைத்தும் செய்த புண்ணியத்தையும் சேர்த்து அழித்து விடும். எனவே பாவ புண்ணிய கணக்கை இரவில் பரிசோதித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும்.

6) ஒருவர் புண்ணியம் செய்யும்பொழுது அவர் மனதின் நிலை கவனிக்கப்படுகிறது. அந்த மனதின் நிலையை பொறுத்தே புண்ணிய பலன்கள் கணக்கிடப்படுகின்றன.

7) நீ எந்த அளவு பிறர் உனக்கு செய்த துரோகத்தையும் பாவத்தையும் மன்னித்து விடுகின்றாரோ, அந்த அளவு உனது பாபங்களும் துரோகங்களும் தந்தை ஈசன் இடத்தில் மன்னிக்கப்படுகின்றன.

8) உன்னை சார்ந்தவர்களுக்கும் உன் குடும்பத்திற்கும் நீ செய்வது உதவி. உன்னை யார் என்றே தெரியாத ஒருவருக்கு நீ செய்யும் உதவி தான் புண்ணியம்.

9) இறைவன் தனக்கு செய்யும் அபிஷேகத்தை விட இயலாதவர்களுக்கு செய்யும் உதவியை மட்டுமே பெரிதாக விரும்புகிறார். எனவே தன்னால் முயன்ற உதவிகளை பிறருக்கு செய்து பார். இறைவனுடைய மனமும் குளிரும் உனது புண்ணியக் கணக்கும் நிறையும். உன்னை துன்புறுத்தும் பிரச்சினைகள் யாவும் அகன்று வாழ்வில் ஒளி பிறக்கும்.

எனவே நாம் செய்வது நமக்கே என்றுணர்ந்து வாழும் வரை வாழ்நாள் முழுவதும் ஒருவர் சத்தியத்தை கடைபிடித்து, இவ்வுலகில் இருந்து முக்தி அடைய வேண்டும்.

Related posts

செல்வ நிலையை பெருக்கும் வரலட்சுமி விரதத்தை தெரிந்து கொள்வோமா?

user

திருச்செந்தூரின் நாழிக்கிணறு பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

அனாதை குழந்தைகளை வளர்ப்பது ஜோதிடப்படி சரியா? தெரிந்து கொள்வோமா!

user

Leave a Comment