Parthiban thanked the fans
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.
சமீபத்தில் ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்தார். மேலும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்…’ என்று நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் பல தலைப்புகளை பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு நன்றி தெரிவித்த பார்த்திபன், புதிதாய் இன்று பிறக்கிறோம், எளிதாய் சிரமம் கடக்கிறோம். பெரிதாய் வாழ்வில் சாதிக்கிறோம். ஹிந்தி தலைப்பு -அள்ளி வழங்கிய, எண்ணிலடங்கா -எதிர்பாரா கோணங்களில். பலரது பாராட்டுக்குரியது, சிலது சிறப்பு! அனைத்தும் பரிசீலனையில். விரைவில் தேர்வாகும். பங்குக் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி! என்று பதிவு செய்து இருக்கிறார்.
இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…