Parthiban responded to the fan in his own style
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க அரசு 2 வாரங்கள் ஊரடங்கு பிறப்பித்தும் அடங்கவில்லை. இதையடுத்து இன்று முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்து உள்ளது. இந்த ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று பிரபலங்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘நாளை சிரிக்க, சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே’ என்ற விழிப்புணர்வு பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “உள்ளிருந்தா உணவு யாரு தருவாங்க” என்று கேள்வி எழுப்பினார். இது வலைத்தளத்தில் பரபரப்பானது.
இதையடுத்து அந்த ரசிகருக்கு பதில் அளித்து பார்த்திபன் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், “சரியான செருப்படி கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தா உணவை உண்ண நாமிருப்போம் நாளை. இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்” என்று தன் ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…