parthiban-post-update
“இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான் ஐந்து பாடல்களை உருவாக்கியுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், \”வா’வெனவாய் பிளந்து வரவேற்றுவாய் நனைய முத்தமிட்டுஇறுதிவரை இருக்க விரும்பிஇறுக அணைத்தாலும்…திட்டமிட்டபடிசட்டென விட்டுவி ல கி சென்றுவிடும்சென்ற வினாடிகள் !!!தும்பைப் பூவின் மீதுதூய்மையான பனித்துளி படர்ந்துதும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூடமெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும்பூப்பதுமுண்டு!இசையை விட தூய்மையானது எது?சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான்வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்.இம்மான் …. இமான்! அபார ஞானமும்அயராத உழைப்புமாய்அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார்.இன்னும் இரண்டு கர்ப்பத்தில்.மைனா’வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை.அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.இனி… இனிமைஇசையாய்…Ok!Tittle ?அறிவிப்போம் விரைவில்!\” என்று குறிப்பிட்டுள்ளார்.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…