paneer-selvam-meet-director-bharathi-raja
தமிழ் திரை உலகில் பிரபல இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக வளம் வரும் பாரதிராஜா சமீபத்தில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்பே விமான நிலையத்தில் மயங்கி விழுந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் வீடு திரும்பி இருந்த நிலையில் மீண்டும் உடல் நலம் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.
பரிசோதனை செய்தத்தில் அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பின்னர் தி நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமந்த கரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் பாரதிராஜாவிற்கு தீவிரமாக சிகிச்சை நடைபெற்றது. தற்பொழுது சிகிச்சை முடிந்து உடல் நலம் சீரான பாரதிராஜா சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…