pandavar ani team ceremony
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
இதேபோல் நடிகர்கள் ராஜேஷ், பிரசன்னா, சிபிராஜ், நந்தா, ரமணா, சரவணன், ஸ்ரீமன், மனோபாலா, அஜய் ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, விக்னேஷ், தளபதி தினேஷ், பிரேம்குமார், ஜெரால்டு, ரத்னப்பா, பிரகாஷ், ஹேமச்சந்திரன், காளிமுத்து, வாசுதேவன், நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, சோனியா ஆகிய 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், தலைவர் நாசர் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவரும் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது குறித்தும், அதற்கான நிதி திரட்டுவது குறித்தும் செயற்குழுவில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…