Latest Tamil cinema News
ஆன்மீகம்

பூஜைக்கு பயன்படுத்தப்படும் பஞ்சபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வோமா?.

🕉 பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது.

🕉 துளசி, அருகு, வேம்பு, வன்னி, வில்வம், இந்த ஐந்தும் பஞ்ச பத்திரம் ஆகும். . இந்த ஐந்தும் மூலிகைகளில் மிகச்சிறந்தவை. பூஜைக்கு சிறந்தவை.

🕉 இவைகளை அர்ப்பனித்து தீர்த்தம் விடும் பாத்திரத்திற்கு பஞ்ச பத்திரம் எனப்பெயர். இதுவே நாளடைவில் பஞ்ச பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

உத்திரிணி கரண்டி எனப்படும் கரண்டியின் மூலமாக பஞ்ச பாத்திரத்தில் உள்ள தீர்த்த நீர் பக்தர்களுக்கு தரப்படுகிறது.

🕉 சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வ இலை, அம்பிகைக்கு உகந்த இலை வேப்பிலை, பெருமாளுக்கு உகந்தது துளசி, விநாயகருக்கு உகந்தது அருகம்புல், பிரம்மனுக்கு உகந்தது அத்தி இலை.

🕉 தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்: பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம் ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.

Related posts

வாஸ்துப்படி அமைக்கும் மாடிப்படி முன்னேற்றத்தின் ஏணிப்படி!.

user

ஆடி மாதத்தில் நமக்கு அதிர்ஷ்டம் தரும் நாமம் எது தெரியுமா? அந்த நாமத்தை ஜெபித்து வளம் பெறலாம். வாருங்கள்!.

user

ரதசப்தமி வழிபாடு பற்றி தெரிந்து கொள்வோமா?.

user