Latest Tamil cinema News
ஆன்மீகம்

பஞ்சமியில் வராஹி வழிபாட்டின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

* வராகி தேவி என்பவள் ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதிபராசக்தி சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுரமர்த்தினியின் குதிரைப்படை தலைவி எனவும் கூட சிலர் இவளை குறிப்பிடுவதுண்டு.

* மனித உடலும் வராகி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே ஆதரவில் அன்னைக்கு நிகரானவள்.

* பஞ்சமி திதியில் இந்த தெய்வத்தின் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க கேட்ட வரங்களை மிக எளிதில் தரக்கூடியவள்.

* பஞ்சமி திதியில் வராஹி வழிபடும் முறை: நல்லெண்ணை தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி ஐம்புலன்களும் ஆன்மீகத்தில் வராஹி தேவியின் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வரவேண்டும். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். கண்டிப்பாக புளிப்பு இருக்கக்கூடாது.

* வாராஹி மந்திரம்:
‘ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹலஹஸ்தாய தீமஹி
தந்நோ வராஹி ப்ரசோதயாத்’

* கல்வி, தொழில் அல்லது உத்தியோகம் மேம்படும். எதிரிகள் பலம் குறையும்.

* கண் திருஷ்டி, செய்வினை அகலும். பயம் விலகும்.

* பஞ்சமி திதி, அமாவாசை திதியில் வராகி அம்மன் மூல மந்திரத்தை ஜெபித்து பலன் பெறலாம்.

Related posts

செல்வ நிலையை பெருக்கும் வரலட்சுமி விரதத்தை தெரிந்து கொள்வோமா?

user

பூஜைக்கு பயன்படுத்தப்படும் பஞ்சபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வோமா?.

user

மூத்தவர் இருக்க இளையவருக்கு திருமணம் செய்தால் நல்லதா? கெட்டதா? அல்லது தோஷமா? தெரிந்து கொள்ளலாமா!

user

Leave a Comment