Latest Tamil cinema News
ஆன்மீகம்

பஞ்சகாவியம் சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

▪ இந்துக்கள் முக்கிய சடங்குகளின் போது பஞ்சகாவியம் சாப்பிடவேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. முருகப்பெருமான் போருக்கு செல்லும் முன் பஞ்சகாவியம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

▪ பஞ்சகாவியம் என்றால் பசு மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் ஆகும். பஞ்சகவ்வியம் இது மூத்திரம், கோமியம், பால், தயிர், நெய் என்று கூறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டது.

▪ கோமூத்திரத்துக்கு வருணனும், கோமியத்துக்கு அக்னியும், பாலுக்கு சந்திரனும், தயிருக்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.

▪ இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் செந்நிறத்து பசுவிடம் கோ மூத்திரத்தையும், பொன்னிறத்து
பசுவின் கோமியத்தையும், பொன்னிறத்து வெள்ளை பசுவின் பாலையும், நீல நிற பசுவின் தயிரையும், கருநிற பசுவின் நெய்யும் கொள்ளின் நலம் எனப்படும்.

▪ அதிலும் கோமூத்திரம், கோமயம் இவை இரண்டும் 6 மாத்திரை எடையும், நெய்யும் பாலும் 3 மாத்திரை எடையும், தயிர் பத்து மாத்திரை எடையும் இருத்தல் வேண்டும் என்பது ஐதீகம்.

இதை மந்திர பூர்வமாக கலந்து உண்ணும் பட்சத்தில் பாபங்கள் நீங்கும். வாதைகள் குறையும். இதனால் கர்மவினை அல்லது பூர்வ ஜென்ம சாபங்கள் நீங்கி, வாழ்க்கை மேம்படும். சௌக்கியம் கிட்டும்.

Related posts

காளியும், தேவியும் அவதரித்தது எப்போது? தெரிந்து கொள்ளலாமா?

user

மகம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்

user

பணத்தட்டுப்பாடு நீங்க ஆன்மீகப்படி சில பரிகார முறைகளை பார்ப்போமா?

user

Leave a Comment