paiya movie re-release-update
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பையா’. லிங்குசாமி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. கார்த்தியின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
‘பையா’ திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகவும் இதன் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் பரவி வந்தது.இந்நிலையில், ‘பையா’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, ‘பையா’ திரைப்படம் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…