Latest Tamil cinema News
மருத்துவம்

திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் படிகாரத்தில், இவ்வளவு மருத்துவ குணங்களா? தெரிந்து கொள்வோமா!

▪ படிகாரத்தைப் பொடித்து சிறிதளவு தடவி வந்தால் புண்கள் குணமாகும்.

▪ படிகாரத்தைப் பொரித்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகச்சொத்தையின் மீது வைத்து கட்டினால் நகச்சொத்தை குறையும்.

▪ சிறிது படிகாரத்தை தூள் செய்து தேனில் குழைத்து ஈறில் பூசி வர பல் ஈறுகளில் உள்ள புண் குறையும் .

▪ துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்களை தடுக்கலாம்.

▪ சிறிது படிகாரத்தை எடுத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

▪ இரத்தக்கட்டு கரைவதற்கு படிகாரம், செம்மண் சேர்த்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவை விட்டு மைப்போல் அரைத்துப் பற்றுப் போடக் குணம் தரும்.

▪ படிகாரத்தை எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பேன்கள் குறையும்.

▪ முட்டையின் வெள்ளைக்கருவில், படிக்காரத் தூளை கரைத்து துணியில் நனைத்துக் கண்ணின் மேல் வைக்க கண்வலி குறையும்.

▪ படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கலந்து காலையில் மட்டும் குடித்து வந்தால் பெரும்பாடு குறையும்.

▪ சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.

Related posts

நறுமணங்களை நுகர்வதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

user

குடல் புண்களுக்கு குணம் தரும் வெந்தயக் கீரை

user

பூச்சூடிக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா?. தெரிந்து கொள்வோமா?

user