OTT site asked for Rs 250 crore ... ‘KGF2’ film crew refused
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். நாயகன் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், ‘கேஜிஎஃப் 2’ புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குனர் பிரஷாந்த் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னணி ஓடிடி தளம் ‘கேஜிஎஃப் 2’ படத்தை ரூபாய் 250 கோடிக்கு நேரடியாக வெளியிட கேட்டுள்ளது. இதற்கு, நடிகர் யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமும் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. தியேட்டரில் மட்டுமே ’கேஜிஎஃப் 2’ படத்தை ரசிகர்கள் ரசிக்கவேண்டும்” என்று ஓடிடி தளத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…