‘ஒத்த செருப்பு’ விரைவில் இந்தியும் ஆங்கிலமும் பேச இருக்கிறது – பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். இப்படத்திற்கு 2020 ட்ரோண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளும் இரண்டு இந்திய தேசிய விருதுகளும் கிடைத்தன.

இந்நிலையில், ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆங்கில ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

 

Suresh

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

9 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

10 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

10 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

10 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

1 day ago