ஒரு நொடி திரை விமர்சனம்

மகள் கல்யாணத்தை நல்ல விமர்சையாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மகளின் அப்பாவான எம்.எஸ் பாஸ்கர். கல்யாணத்தை நடத்துவதற்காக தன்னுடைய நிலத்தை வேல ராமமூர்த்தியிடம் அடமானம் வைக்கிறார். குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க போகும் நேரத்தில் எம்.எஸ் பாஸ்கர் காணாமல் போகிறார். இதனால் அவரது மனைவியான ஸ்ரீரஞ்சினி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். இந்த வழக்கை கதாநாயகனான தமன்குமார் எடுத்து விசாரிக்கிறார். அச்சூழ்நிலையில் அடுத்ததாக தமன் குமாருக்கு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்னின் வழக்கும் வருகிறது. இந்த இரண்டு சம்பவங்களிலும் தமன்குமார் உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்க, அடுத்தடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது. உண்மையில் இரண்டு சம்பவங்களிலும் நடந்தது என்ன? அந்த இளம் பெண்ணின் கொலைக்கு காரணம் என்ன? எம்.எஸ் பாஸ்கருக்கு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.நடிகர்கள்படம் முழுக்க தமன் குமாரின் போலீஸ் விசாரணையில் பயணிக்கும் நிலையில் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் வேல ராமமூர்த்தி, பழ. கருப்பையா, தீபா ஷங்கர், எம் எஸ் பாஸ்கர், டீக்கடைக்காரர், சலூன் கடைக்காரராக நடித்தவர்கள் என அத்தனை கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வழங்கி உள்ளார்கள். இயக்கம்ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையே புரட்டிப் போடும் என்ற அடிப்படை தத்துவத்தை கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மணிவர்மன். படம் முழுக்க விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து இருக்கிறார். குற்றம் செய்தவர்கள் யார் தான் என்ற கேள்வியுடன் பார்ப்பவர்களை யோசைனையில் ஆழ்த்தி சச்பன்ஸ் திரில்லராக இயக்கியிருக்கிறார் மணிவர்மன்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் எல்லா டிவிஸ்ஸ்டுகளையும் ஒன்றிணைந்த புள்ளி மிகவும் திறமையாக கையாண்டுள்ளார் இயக்குனர்.ஒளிப்பதிவுபடத்தின் விறுவிறுப்புக்கேற்ப ஒளிப்பதிவை மிக அழகாக ஒளிப்பதிவை கையாண்டுள்ளார் கே.ஜி ரத்தீஷ்இசைசஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை கேட்கும் ரகம்.தயாரிப்புமதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து ஒரு நொடி திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

oru-nodi movie review
jothika lakshu

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

1 day ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

1 day ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 day ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

1 day ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 day ago