மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.
கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.
கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகையை விரட்டும் முருங்கை. முருங்கை மரத்தில் கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே. அதிகச் சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை.
சத்துக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் இருப்பவை இரும்புச் சத்தும், வைட்டமின் சி-யும் உள்ளது.
பலன்கள்: இரும்புச் சத்தும் வைட்டமின் சியும் சேர்ந்த கலவை, ரத்தத்தை உற்பத்தி செய்யும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால், முடி உதிர்தல் நிற்கும். இளநரையைப் போக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடல்சூடு தணியும். உடல்நலத்தை அதிகரிக்கும்.
ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை, முருங்கைக் கீரை சூப் வைத்து, அதில் எலுமிச்சைச் சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…