மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம்.. ஆனால் மேடையில் ஓபனாக பேசிய இயக்குனர்.!!

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம்பாக்கம் “

தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன்.

இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது.

ரிலீஸ் தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு, இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியதாவது.

“இந்த மேடையில் நிற்க வைத்த ஜெயச்சந்திரன் ஜே அவர்களுக்கு நன்றி. கிருஷ்ணகிரி கோவிந்தராஜ் அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக ரமேஷ் குமார் அவர்களுக்கும் நன்றி . நகரி பரத்குமார் அவர்களுக்கும் நன்றி.

இரண்டறை வருட போராட்டம். கஜினி முகமதுவை விட அதிகப்போராட்டத்தைச் சந்தித்தேன். நான் 80% உண்மையாக இருப்பவன். சினிமாவில் சில விசயங்களை செய்யவே முடியாது. ஒரு மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம்.

ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம். இந்தப்படத்தின் டீசர் வெளிவந்த பின் பெரிய ரீச் ஆனது. அப்பவே வியாபாரத்திற்கு வழி கிடைத்தது. ஆனால் இந்தப்படத்தை வெளியிடக்கூடாது என பெண்ணின் தந்தை கேஸ் போட்டுவிட்டார்.

அந்தப்பெண் செத்து மூன்று மணி நேரம் யாருமே அருகில் செல்லவில்லை. இந்தப்படத்தின் கதையை ரைட்டர் சூளைமேட்டில் ஒவ்வொரு தெருத்தெருவாகப் போய் எழுதினார். இந்தப்படத்தில் சைபர் க்ரைம், போலீஸ் டிப்பார்ட்மெண்ட் முதற்கொண்டு பல விசயங்கள் இருக்கு.

இந்தப்படத்தின் இயக்குநரை கைது செய்யணும் என்று போலீஸ், சென்சார் அதிகாரி பக்கிரிசாமியிடம் போய் கேட்டார்கள். நான் பெங்களூரில் போய் ஒளிந்துகொண்டு பின் பெயில் வாங்கியதும் வந்தேன். நான் ஏழு படம் செய்தவன். ஆனால் என்னைப் போலீஸ் 10 கொலைகளைச் செய்தவன் போல நடத்தினார்கள்.

என் ஆபிஸ் பாய்ல இருந்து 24 பேரிடம் விசாரித்தார்கள். போலீஸ் என்னை படத்தில் அதைத் தூக்கு இதைத்தூக்கு என்று நச்சரித்தார்கள். கமிஷனர் முதல் பலரையும் சந்தித்து கதை சொல்லி அவர்களிடம் 6 மாதம் கழித்து தான் லெட்டர் கிடைத்தது.

அதன்பின் சென்சார் போனேன். அங்கு பெயர் டைட்டில் ஆகியவற்றை மாற்றச் சொன்னார்கள். பின் க்ளைமாக்ஸை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை. பின் ஆறுமாத போராட்டம். அது முடிந்ததும் அந்தணர்கள் கேஸ் போட்டார்கள். அதன்பின் ஒரு வழக்கு வந்தது.

அதையும் சமாளித்து படத்தை வெளியிட நினைத்தால் கொரோனா வந்துவிட்டது. தற்போது Cineflix என்ற ஓடிடியில் படம் வரும் 24-ஆம் தேதி வெளிவருகிறது. இந்தப்படத்தை அனைத்து கேபிள் இணைப்புகளில் 77-ஆம் நம்பரை ரிமோட்டில் அழுத்திப் பார்க்கலாம்.

தயவுசெய்து ₹49 ரூபாய் கட்டிப் பார்க்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை பைரஸி எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் நான் சூசைட் தான் பண்ணணும். ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார்கள்” என்றார்.

admin

Recent Posts

மழைக்காலத்தில் எந்தெந்த பழங்கள் சாப்பிடக்கூடாது.. வாங்க பார்க்கலாம்.!!

மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

2 hours ago

Aaromaley – Trailer

Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…

3 hours ago

Valluvan Movie Audio & Trailer launch | RK Selvamani | K Rajan

https://youtu.be/QC_9eRGrkjQ?t=1

3 hours ago

Messenger Movie Press Meet | Sreeram Karthick

https://youtu.be/g9_8p3ui0us?t=1

3 hours ago

Thaarani Movie Audio & Trailer Launch

https://youtu.be/oXvWmYMZOoI?t=10

3 hours ago

பைசன் ; 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

8 hours ago