Not going to get married - Simbu film actress
தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார்.
தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி, தற்போது பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். இவர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லிகர்’ படத்தை தயாரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக, நடிகை சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவியது.
இதுகுறித்து நடிகை சார்மி கூறியதாவது: “தற்போது எனது வேலையில் சிறந்த ஒரு கால கட்டத்தில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு குட் பை, சுவாரஸ்யமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள்,” என தெரிவித்துள்ளார்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…