“சிம்பு இல்லன்னா நான் இல்ல!” – ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ விழாவில் சந்தானம் நெகிழ்ச்சி!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் வருகிற 16ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. சந்தானத்துடன் கௌதம் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சந்தானம், நடிகர் சிம்புவுக்கும், மறைந்த இயக்குனர் இந்திரா செளந்தர்ராஜனுக்கும் தனது நன்றியை உருக்கமாக தெரிவித்தார்.

சந்தானம் பேசுகையில், ‘தில்லுக்கு துட்டு’ வரிசை படங்கள் மற்றும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஆகியவற்றில் முக்கிய பங்காற்றிய இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் சிம்பு இல்லையென்றால் இன்று தான் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தன்னை கவனித்து, ‘மன்மதன்’ படத்தில் வாய்ப்பளித்தவர் சிம்புதான் என்றும் அவர் குறிப்பிட்டார். ‘மன்மதன்’ படப்பிடிப்பின் முதல் நாளன்று தனக்கான அறிமுக காட்சியில் ரசிகர்கள் கைதட்டுவார்கள் என்று சிம்பு உறுதியளித்ததையும், அது உண்மையிலேயே நடந்ததையும் சந்தானம் நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு தருணத்திலும் தனக்காக சிந்திக்கும் சிம்புவுக்கு தான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இப்படத்தின் தயாரிப்பாளரும், தனது உயிர் நண்பருமான ஆர்யாவையும் சந்தானம் புகழ்ந்து பேசினார். ஆர்யா தான் ‘சேட்டை’ படத்தில் தனக்கு ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை வழங்கியதாக அவர் கூறினார். ரஜினிகாந்த் கூட ‘லிங்கா’ படப்பிடிப்பின்போது இது குறித்து கேட்டதாக சந்தானம் குறிப்பிட்டார். தனது புதிய வீடு வாங்கிய அனுபவத்தையும், ஆர்யா அந்த பழைய வீட்டை இடித்துவிட்ட நகைச்சுவையான சம்பவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் செல்வராகவனின் பங்களிப்பு இப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்றும், ரசிகர்கள் தனது படத்திற்கு அளிக்கும் ஆதரவுக்கு நன்றி என்றும் சந்தானம் தனது உரையை நிறைவு செய்தார். சிம்புவுடனான தனது நீண்டகால நட்பையும், அவர் அளித்த வாய்ப்புகளையும் சந்தானம் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது விழாவில் அனைவரையும் கவர்ந்தது.

No Simbu, no me! – Santhanam is excited at ‘DD Next Level’!
jothika lakshu

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

10 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

10 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

17 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

18 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

18 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

18 hours ago