No adjustment; Chiranjeevi's speech controversy: An incident that goes viral..
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு
சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி இயக்கிய ‘மனசங்கர வரபிரசாத்காரு’ இப்படி நாயகி நயன்தாரா. இந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் பேச்சு சர்ச்சையாகிவிட்டது. அவர், பேசுகையில்,
‘காஸ்டிங் கவுச்லாம் இல்லவே இல்லை. எல்லாம் தனி நபரை பொறுத்தது தான். ஸ்ட்ரிக்டாகவும், சின்சியராகவும் இருந்து கெரியரில் கவனம் செலுத்தினால் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள். இந்த துறை ஒரு கண்ணாடி மாதிரி. உங்களை அப்படியே பிரதிபலிக்கும். மொத்த துறையும் பிரச்சனையானது என்று சொல்வது சரியில்லை’ என்றார்.
தன் மகள் திரையுலகிற்கு வந்திருப்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், காஸ்டிங் கவுச்சே இல்லை என்று சிரஞ்சீவி கூறியது பற்றி பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அதாவது, உங்கள் மகள் பவர்ஃபுல்லான இடத்தில் இருந்து வந்திருப்பதால், யாரும் அவர் அருகில் கூட செல்ல மாட்டார்கள். ஆனால், அனைவரும் இப்படி அதிகாரமிக்க இடத்தில் இருந்து நடிக்க வருவது இல்லையே.
நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்லலாம்? திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பல காலமாக உள்ளது. ஆனால், நீங்களோ முட்டாள் மாதிரி பேசுகிறீர்கள். உங்கள் மாஃபியா ரொம்ப ஸ்டிராங்காக இருப்பதால் உங்கள் பட டேட்ஸுகளை கூட எந்த ஹீரோவும் தொட மாட்டார். அப்படி இருக்கும்போது உங்களின் மகள்களிடம் எப்படி சான்ஸ் எடுப்பார்கள்?. ஆனால், சாதாரண பெண்களுக்கு அப்படி இல்லை.
நயன்தாரா கூட முன்பு பேட்டி ஒன்றில் ‘வாய்ப்புக்காக படுக்கைக்கு கூப்பிட்டனர்’ என தெரிவித்தார். அப்படி இருக்கும்போது சிரஞ்சீவி வேறு மாதிரி பேசியிருக்கிறாரே என பலரும் கேள்விக்கணை தொடுத்து வருகின்றனர்.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…
வித் லவ் படத்தை ரஜினி சார் பார்த்து என்ன சொன்னார் என்று கேள்விக்கு சௌந்தர்யா பதில் அளித்தார். தமிழ் சினிமாவில்…