nithya-menon-in-audio-launch photo
நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் வீல்சேரில் வந்து கலந்து கொண்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அதனால் தான் அவர் வீல் சேரில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார். இது குறித்து நித்யா மேனன் மேடையில் பேசும்பொழுது “நீங்க இல்லாமல் எப்படி, வீல் சேரிலாவது வரவேண்டும்..” என தனுஷ் கூறியதால் அவர் வந்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவலோடு இருக்கும் நித்யா மேனனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…