Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இனிமேலும் பொறுக்க முடியாது.. நித்யா மேனன் கோபத்தில் பேசிய வீடியோ

இதுவரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே நடித்துவந்த நித்யா மேனன் தற்போது மிஷன் மங்கள் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார்.

தற்போது கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நித்யா மேனன் சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய படம் பற்றித்தான் பதிவிட்டு வந்தார்.

வெள்ளம் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

இதை பார்த்து கோபமான நித்யா மேனன் கோபத்துடன் பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். “வழக்கமாக இதுபோன்ற ட்ரோல் வந்தால் கொண்டுகொள்ளமாட்டேன். ஆனால் இனிமேலும் பொறுக்க முடியாது.

எல்லைமீறி செல்கிறது. முதலில் கண்ணாடியை பார்த்து நீங்கள் என்ன செய்தீர்கள் என பாருங்கள். நான் சமூக வலைத்தளத்தில் பதிவிடவில்லை என்பவதற்காக எதுவும் உதவி செய்யவில்லை என அர்த்தமில்லை” என அவர் கூறியுள்ளார்.

விடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க

Related posts

பிக் பாஸ் மேடையில் கண்ணீர் விட்ட கமல், அதிர்ச்சியில் உறைந்த அரங்கம் – காரணம் என்ன?

user

சீனாவில் வெளியான 2.0 படத்தின் பாக்ஸ் ஆஃபில் வசூல்! மூன்று நாள் முடிவு இதோ

user

அஜித் அவர்களை சந்திப்பாரா? எல்லோருமே ஆவல்

user

Leave a Comment