சூர்யா 40 படத்தின் புதிய தகவல்

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், விமர்சகர்கள், பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டினார்கள். இப்படத்தை அடுத்து ’சூர்யா 40’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’சூர்யா 40’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கும் படத்தை முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

4 hours ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

5 hours ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

9 hours ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

9 hours ago

தனுஷின் ‘D56’… மாரநாடு கருப்பசாமி அருளுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…

9 hours ago

மகாநதி லட்சுமி பிரியா எவிக்ட்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…

9 hours ago