Latest Tamil cinema News
மருத்துவம்

நீர்முள்ளி விதையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

# நீர்முள்ளி விதையை பொடி செய்து 1 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர இரைப்பிருமல் குணமாகும்.

# நீர்முள்ளி விதையை சூரணம் செய்து பாலில் குடிக்க இரத்தம் விருத்தியடையும்.

# நீர் முள்ளியை உலர்த்தி,வெயிலில் வைத்து உப்பு எடுக்க வேண்டும். அந்தஉப்பை கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும்.

# நீர் முள்ளி இலையை எடுத்து அதனை நன்றாக காய்ச்சி குடித்துவர நீர்க்கடுப்பு குறையும்.

# நீர்முள்ளி விதை, வசம்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை மூன்று நாட்கள் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் ஆட்டம் ஆகியவைகள் குறையும்.

# நீர்முள்ளியுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து இடித்து பொடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்

# பிரண்டை, கற்றாழை வேர், நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உள் மூலம் குறையும்.

# நீர்முள்ளி விதையைப் பொடி செய்து ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

# நீர் முள்ளி விதை, பாதாம்பருப்பு , கசகசா ஆகியவற்றை நீரில் ஊறவைத்துக் காய்ச்சி பாலுடன் குடித்து வர விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

Related posts

காயகல்பம் மூலிகை, அதன் பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

user

பசியின்மை காரணமாக அவதிப்படுகிறீர்களா? ஜீரண சக்தி அதிகரிக்க சில டிப்ஸ் !.

user

குழந்தைக்கு எந்த எண்ணெயினால் மசாஜ் செய்வது நல்லது? தேங்காய் எண்ணெய் நல்லதா? தெரிந்து கொள்ளலாமா!

user

Leave a Comment