ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா?

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை பாலிவுட் படங்களில் நடித்திராத நயன்தாரா, இப்படம் மூலம் எண்ட்ரி கொடுப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே நடிகை நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

19 minutes ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

25 minutes ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

28 minutes ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

34 minutes ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

39 minutes ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

42 minutes ago