Nayanthara movie ready for OTT release ... Release date announced
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் படங்கள் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் நிழல், பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்திருந்தார்.
திரில்லர் படமான இது, கடந்த மாதம் 9-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், இரண்டே வாரங்களில் தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டது.
இதனால் இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, தற்போது அதன் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 11-ந் தேதி ‘நிழல்’ படம் ஓடிடி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…