Latest Tamil cinema News
மருத்துவம்

இயற்கையில் விளையும் உணவினை எடுத்துக் கொண்டு இதமாக வாழலாம். தெரிந்துகொள்வோமா?.

▪ கீரை, பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

▪ காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும்.

▪ கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

▪ சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். சின்ன வெங்காயம் வெயில் காலத்தில் .ஏற்படும் நோய்களை தடுக்ககூடியது.

▪ தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

▪ சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும்.

▪ ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும்.

▪ அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

▪ உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும்.

Related posts

பூச்சூடிக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா?. தெரிந்து கொள்வோமா?

user

அளவற்ற ஆரோக்கியம் தரும் அதிமதுரத்தை பற்றி பார்ப்போமா?

user

குழந்தைகளின் துணியை சுத்தப்படுத்த சமையல் சோடாவின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா?.

user

Leave a Comment