Latest Tamil cinema News
மருத்துவம்

உங்கள் முகம் பொலிவுடன் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?. இதோ சில டிப்ஸ்!.

முகம் புத்துணர்ச்சி பெற :

1) மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்து, அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவி, முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்துங்கள்.

2) உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

3) செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைத்து, இக்கலவையை முகத்தில் தடவி காய்ந்தபின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

இதனால் பக்க விளைவுகள் ஏதுமின்றி முகம் எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.

4) 3 டீஸ்பூன் காபிப் பொடியில், 1 டீஸ்பூன் பால் மற்றும் சிறிது கசகசா சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து கழுவினால், முகம் புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் இருக்கும்.

5) ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்து, 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

Related posts

பெண்களின் மாதவிடாய் காலத்தில் குறைந்த அளவு உதிரப்போக்கு, அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட காரணங்கள் என்ன?. தெரிந்து கொள்ளலாமா!

user

பொங்கல் பண்டிகை காலங்களில் சமைப்பதற்காக பயன்படுத்தும் பரங்கிக்காயில், இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா?

user

பயனுள்ள எளிமையான இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

user

Leave a Comment