பரபரப்பாக வெளிவரக் காத்திருக்கும் “மைடியர் லிசா”.. மோஷன் போஸ்டரை வெளியிடும் ஆர்யா!

ஸ்ரீ நிதி பிலிம்ஸ் தயாரிப்பில் “மை டியர் லிசா” எனும் புதிய திரைப்படம் வெளிவர தயார் நிலையிலுள்ளது .

இப்படத்தில் விஜய் வசந்த், சாந்தினி, சிங்கம் புலி,ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் “மைடியர் லிசா”.

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது .இதன் இறுதி கட்டப் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது விஜய் வசந்த்..தின் கால் முறிந்தது.அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இப்போது அவர் பூரண குணமடைந்து திரும்பியபின் முழு படப்பிடிப்பையும் முடித்து வெற்றிகரமாக இறுதிகட்ட பணிகளும் முடிவடைந்துள்ளது. வெகுவிரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறாள் மைடியர் லிசா.

பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இந்த த்ரில்லர் படத்தில் பெண்களுக்கு ஆதரவான சமூகக் கருத்தை வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் ரஞ்ஜன் கிருஷ்ணதேவன்.

இதர விவரங்கள் :

எழுத்து , இயக்கம் – ரஞ்ஜன் கிருஷ்ணதேவன்.
ஔிப்பதிவு-சாஜன் PJ
இசை-DM.உதயகுமார்,பின்னணி இசை- ஹரிஷ்சுரேந்தர்
எடிட்டிங் – கார்த்திக் ராம்
சண்டை-வீரா.
பாடல்கள் – ராஜா குருசாமி, ஜான்சன், வைரபாரதி
தயாரிப்பு- ஸ்ரீநிதி பிலிம்ஸ்
தயாரிப்பாளர்- ரமேஷ்ரெட்டி
இசை உரிமம் -TripleVrecords

இப்படத்தின் மோஷன் போஸ்டரை நாளை காலை 10 மணிக்கு பொங்கல் விருந்தாக நடிகர் ஆர்யா வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

Suresh

Recent Posts

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…

12 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

12 hours ago

இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என கேட்ட விஜய் சேதுபதி.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

16 hours ago

விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

19 hours ago

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

21 hours ago

விஜய் சேதுபதியின் பேச்சு.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

21 hours ago