My Dear Bootham Movie Review
பூதங்களின் உலகில் அம்மக்களின் அரசனாக விளங்குபவர் கற்கிமுகி (பிரபு தேவா). குழந்தை இல்லாத அவரின் பல வருட வேண்டுதலுக்கு பிறகு கிங்கினி என்ற மகன் பிறக்கிறான். அவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்ப்பாராத விதமாக ஒரு முனிவரின் தவத்தை கலைத்து விடுகிறான். கற்கிமுகியின் மகன் செய்யும் தவறுக்காக அந்த சாபத்தை தான் ஏற்கிறார். இதனால் அவர் கற்சிலையாக மாற்றி பூமியில் வீசிப்படுகிறார்.
பூமியில் கற்சிலையாக மாறியிருக்கும் கற்கிமுகியை எதிர்பாராத விதமாக தொட்டு அவரின் அந்த சாபத்தில் இருந்து திருநாவுக்கரசு (அஷ்வந்த்) விடுவிக்கிறான். தன்னுடைய தாயுடன் (ரம்யா நம்பீசன்) வாழ்ந்து வரும் திருநாவுக்கரசுக்கு கற்கிமுகி எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறான். திருநாவுக்கரசு எண்ணுவதை பேச்சின் மூலம் வெளிப்படுத்டுவதில் தடுமாற்றம் இருப்பதால் கற்கிமுகியை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலில் இருந்து அவன் எப்படி அந்த மந்திரத்தை சொல்கிறான்? பூத உலகிற்கு செல்ல திருநாவுக்கரசு உதகிறானா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
குழந்தைகளை இலக்காக கொண்டு மை டியர் பூதம் படத்தை இயக்கி அதில் சிறந்து விளங்கி இருக்கிறார் இயக்குனர் என்.ராகவன். இவரின் முந்தய படமான மஞ்சப்பை படத்தில் இடம்பெறும் வெங்கடசாமியின் (ராஜ்கிரண்) குறும்புத்தனமான கதாப்பாத்திரத்தை போன்று, இப்படத்தின் கதாப்பாத்திரங்களை வடிவமைத்து பார்வையாளர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். பூதம் மற்றும் சிறுவனுக்கு இடையே உள்ள காமெடி மற்றும் சென்டிமெண்ட் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம். அதிகபடியாக இடம்பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
குழந்தைகளை கவரும் வகையில் காமெடி கலந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிரபு தேவா, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார். பாடல்களில் இடம்பெறும் பிரபு தேவாவின் நடன வடிவமைப்பு அனைவருக்கும் விருந்தளித்திருக்கிறது.
மற்றொரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அஷ்வந்த் அவனின் குறும்புத்தனமான நடிப்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் படியும் ரசிக்க வைக்கும் படியும் உள்ளது. இருவரின் கூட்டணி இப்படத்திற்கு வலுவை சேர்த்துள்ளது. ரம்யா நம்பீசன் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
டி.இமானின் பாடல்கள் அனைவரையும் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல்கள் குழந்தைகள் கொண்டாடும் வகையில் வடிவமைத்து பாராட்டை பெற்றுள்ளார். யு.கே.செந்திலின் ஒளிப்பதிவு சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது. கதைக்கு தேவையான காட்சிகளை எதார்த்தமாக எடுத்திருக்கிறார்.
மொத்ததில் ‘மை டியர் பூதம்’ குழந்தைகளின் மாயவன்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…