Music storm that sang 5 songs in the movie 'Moonwalk'!
‘மூன்வாக்’ படத்தில் 5 பாடல்களை பாடிய இசைப்புயல்!
‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை மிகவும் ஈர்த்தன என்பது தெரிந்ததே. அவ்வகையில் ‘காதலன்’ படத்தின் மூலம் இணைந்து, தொடர்ந்த கூட்டணியில் ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ ஆகிய படங்களும், பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
‘மின்சார கனவு’ படத்துக்கு பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மூன்வாக்’ என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். ‘மூன்வாக்’ என்பது ‘பாப்’ இசையுலகின் மன்னர் என போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் பெற்றுள்ளது.
இப்டத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ‘லஹரி மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளது.
குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறன. ‘மூன்வாக்’ படத்தின் வீடியோ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இப்படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில், ‘மூன்வாக்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதிகபட்சம் ஒரு படத்தில் ஒரு பாடலைப் பாடிவந்த ரகுமான், முதல் முறையாக அனைத்து பாடல்களையும் பாடியிருப்பது ரசிகர்கள் மத்தில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…