நந்தினி இடம் சிக்கிய சூர்யா, சுரேகா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு வீட்டுக்கு வர நந்தினி அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே சூர்யா நீ எங்க நந்தினி இங்க நின்னுகிட்டு இருக்க என்று கேட்க இதுதான் வீட்டுக்கு வர நேரமா என்று கேட்கிறார். இல்ல கொஞ்சம் வேலை இருந்தது என்று சொல்ல என்ன வேலை என்று கேட்க உயிர் நண்பன பாக்க போயிருந்தேன் என சொல்லுகிறார் இவ்வளவு லேட்டா எல்லாம் வராதீங்க சார் என்று அட்வைஸ் கொடுக்க நீ எதுக்கு நந்தினி இவ்வளவு நேரமா முழிச்சுக்கிட்டு இருக்க என்று கேட்க உங்களுக்காக தான் என சொல்லுகிறார். முன்னெல்லாம் எதுவும் தோணாது இப்போ நீங்க லேட் ஆனா மனசு பதறுது உங்களுக்கு என்ன ஆச்சுன்னு தோணிக்கிட்டே இருக்கு என்று சொல்லுகிறார். நீ எதுக்கு நந்தினி இப்படி கேள்வி கேட்டுகிட்டு இருக்க என்று கேட்க ஆமா நான் இந்த வீட்டு வேலைக்காரி இல்ல அதனால கேட்க கூடாது தான் என்று சொல்லிவிட்டு நந்தினி கோபமாக போக சூர்யா தடுத்து நிறுத்தி நான் அப்படியெல்லாம் சொல்லல என்ன சூர்யா சொல்லுகிறார். நான் உங்களை கொடுமை படுத்தரனா என்று நந்தினி கேட்கிறார். சூர்யா உளறிக் கொண்டே இருக்க என்ன குடிச்சு இருக்கீங்களா என்று கேட்கிறார்.

என்ன பாத்தா குடிச்ச மாதிரியா இருக்கு என்று கேட்க பார்த்தா தெரியல ஆனா ஒளறிக்கிட்டு இருக்கீங்களே என்று சொல்ல சூர்யா ஊதி காட்டுகிறார். என்ன வித்தியாசமான ஸ்மல் இருக்கு என்று சொல்ல கொய்யாப்பழமும், பாக்கு சாப்பிட்டேன் என சொல்லிவிட்டு சரி வா போய் தூங்கலாம் என சொல்ல முதல்ல நீங்க சாப்பிடுங்க என்று சொல்ல எனக்கு வேண்டாம் என சூர்யா சொல்லுகிறார் நீங்க வருவீங்கன்னு நானும் சாப்பிடாம இருக்கேன் என்று சொல்ல நீ ஏன் சாப்பிடல சரி போய் எடுத்துட்டு வா என சொல்லி அனுப்பிவிட்டு சூர்யா அவகிட்ட மாட்டிகாதடா சூர்யா என சொல்லி சாப்பிட உட்கார நந்தினியும் பரிமாறுகிறார். சூர்யாவும் நந்தினியை உட்கார வைத்து சாப்பிட சொல்லுகிறார். பிறகு இருவரும் சாப்பிட்டு முடிக்க சூர்யா சூப்பர் என்று சொல்லுகிறார். சரி போங்க என்று சொல்ல முதலில் நீ போ என்று சூர்யா சொல்ல முதல்ல நீங்க போங்க என சொல்லுகிறார்.

படிக்கட்டில் ஏறும்போது சூர்யா நான் குடிச்சிருக்கேன்னு நீ சந்தேகப்படுறியா என்று கேட்க நீங்க உளறும்போது சந்தேகமா தான் இருந்தது என்று சொல்ல சூர்யாவை மேலே போக சொல்லுகிறார். உடனே சூர்யா கொஞ்சம் தடுமாற முதலில் நீ ஏறிப்போ நந்தினி என்று சொல்ல நீங்க பேசுறத பாத்தா குடிச்சிருக்கிற மாதிரியே தெரியுது என்று நந்தினி சந்தேகப்படுகிறார். இப்போ எப்படி நடந்து போறேன்னு மட்டும் பாரு என்று சொல்லிவிட்டு வருகிறார். மேலே ஏறி வர சுரேகா வலியில் கத்தும் சத்தம் கேட்டு என்ன சத்தம் என கேட்கிறார் உங்கள் தங்கச்சி சுரேகாவுக்கு தான் கை வலி இன்னும் சரியாகவில்லை என்று சொல்ல ஓ அந்த குட்டி சாத்தானுக்கு என்று சொல்லுகிறார் இப்ப கூட திட்டணுமா என்று கேட்க திட்டணும்னு முடிவு எடுத்தால் எப்ப வேணா திட்டலாம் என்று சொல்லுகிறார்.

என்ன கையில் மஞ்சள் கயிறு என்று கேட்க சுரேகா அம்மாவுக்காக வேண்டிக்கொண்டு கட்டினது ஆனால் அவங்க அதை தூக்கி விசிறி அடிச்சிட்டாங்க அதனாலதான் அவங்களுக்கு கை வலி வந்து இருக்கும் தயவு செய்து இந்த கயிறு எப்படியாவது அவங்க கையில் கட்டி விடுங்க என்று சொல்ல, எதுக்காக உனக்கு இந்த வேலை என்று கேட்ட நந்தினி அட்வைஸ் கொடுக்கிறார் பிறகு சூர்யா வேறு வழி இல்லாமல் நந்தினியின் கையில் இருந்த கயிறை வாங்கி சரி நீயும் வா நீயே அவ கைல கட்டிவிடு அவள் என்ன பண்றான்னு நானும் பார்க்கிறேன் என சொல்லிவிட்டு ரூமுக்கு வருகிறார். நந்தினியும் சுரேகாவிற்கு சட்டம் முயற்சி செய்ய சுரேகா வலியில் இந்த பக்கமும் அந்த பக்கமும் மாறிக்கொண்டே இருக்க ஒரு வழியாக நந்தினி கையில் கட்டி விட்டு சென்று விடுகின்றனர். மறுநாள் காலையில் மாதவி சுந்தரவல்லி இடம் நைட் ஃபுல்லா அவ கை வலியில் அழுதுகிட்டே இருந்தா என்று சொல்ல திடீர்னு எப்படி கை வலிக்கும் என்று சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

நம்ம இதுக்கு மேல வெயிட் பண்ண வேணாம் ஹாஸ்பிடலுக்கு போகலாம் என அருணாச்சலம் சொல்ல, சுரேகா ஜாலியாக வந்து உட்காருகிறார். மாதவி உனக்கு கை வலி சரியா போயிடுச்சா என்று கேட்க எனக்கும் நைட் ஃபுல்லா கை வலி இருந்தது ஆனா எப்படி சரியாச்சுன்னு எனக்கே தெரியல மாத்திரை போட்டு தான் சரியா இருக்கும் என்று சுந்தரவல்லி சொல்ல அதனால எல்லாம் சரி ஆகல இந்த கயிறு யார் கையில காட்டினது நைட்டு தூங்க போகும்போது என் கைல இந்த கயிறு இல்ல யாரு கட்டுனது என்று கேட்க மாதவியை சுந்தரவள்ளியும் நான் கட்டவில்லை என்று சொல்ல வேற யாரு கட்டியிருப்பான் நந்தினி தான் கட்டிருப்பா என்று அருணாச்சலம் சொல்லுகிறார். உடனே சூர்யாவும் வந்து கரெக்ட் டாடி நந்தினி தான் கட்டுனா அவளை தான் நான் கூட்டிட்டு போய் கட்ட வச்சேன் என்று சொல்ல, அவ ஒரு கயிறு கட்டினால் உடம்பு சரியா போயிடுமா சுரேகா முதல்ல கழட்டி எறி என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சுரேகாவிடம் கோவிலுக்கு போவதில் என்னமா இருக்கு என்று கேட்க கொஞ்சம் கொஞ்சமா உரிமை எடுக்க பாக்குறியா அதுதான் உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான்ல சூர்யா என்ற ஏமாளி அவனைப் போய் கூப்பிடு நாளா வரமாட்டேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா நந்தினி தூங்கிய பிறகு குடிக்க போக சூர்யா காலில் நந்தினி துணி கட்டி இருப்பது தெரியாமல் மாட்டிக் கொள்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial today update 15-10-25
jothika lakshu

Recent Posts

பைசன்: முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…

19 minutes ago

முத்து மீனாவுக்கு வந்த சந்தேகம், ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

35 minutes ago

இந்த வாரம் சிறைக்குச் செல்ல போகும் இரண்டு போட்டியாளர்கள் யார்? வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

3 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

16 hours ago

துஷார்..கம்ருதீன்.. நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கப் போகும் போட்டியாளர் யார்? வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 day ago