moondru mudichu serial today promo update 30-10-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அருணாச்சலமும் வந்துவிட சூர்யா உங்க கையால நீங்க டிரஸ் எடுத்து குடுங்க டாடி என்று சொல்ல முதல்ல பெரியவங்கள்ள இருந்து ஆரம்பிக்கலாம் அம்மாச்சி கிட்ட கொடுங்க என்று சொல்ல அவரும் ஒவ்வொருத்தருக்காக எடுத்துக் கொடுக்கிறார் பட்டாசு எல்லாம் வாங்கிட்டியாடா என்று கேட்க அதெல்லாம் வேற டிபார்ட்மென்ட் அதனால வாங்கி வெளியே வச்சாச்சு என்று சொல்ல பார்த்து கவனமா வெடிங்கமா என்று சொல்லுகிறார் இதுக்காக தான் நீ வெளியே போயிருந்தியாடா என்று கேட்க ஆமா டாடி உன்ன மாதிரி கட எல்லாம் ரொம்ப ரஷ்ஷா இருக்கணும்னு நினைச்சா நான் இப்ப அதெல்லாம் இல்ல என்று சொல்ல இப்பல்லாம் ரொம்ப ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் சின்ன சின்ன கடைகள் எல்லாம் வந்துடுச்சு அதனாலதான் என்று சொல்லுகிறார் சரி எல்லாருக்கும் வாங்கினேன் நந்தினிக்கு வாங்கலையா என்று கேட்க அது எப்படி டாடி அவ ஏதாவது கேக்குறாளா பாருங்க அவ கேக்க மாட்டா அதனால தான் நானே வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி காட்ட அசோகன் இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் இது விலை அதிகமா இருக்கும் போல இதையெல்லாம் நான் கட்டமாட்டேன் சார் என்று நந்தினி சொல்லுகிறார்.
இது நான் உனக்காக தேடி அலைந்து வாங்கினது நீ கட்டி தான் ஆகணும் என்று சொல்ல அம்மாச்சி புருஷன் ஆசையா வாங்கி கொடுக்கிற புடவையை வேண்டான்னு சொல்லுவியா என்று சொல்ல சரியா சொன்னிங்க பாட்டி என்று சொல்லிவிட்டு அருணாச்சலம் கையில் கொடுத்து உங்க மருமகளுக்கு நீங்களே கொடுங்க என்று சொல்லுகிறார். நந்தினி புடவையை வாங்கிக்கொண்டு சிங்காரத்திடம் நீங்க போய் அந்த சீர்வரிசை தட்ட எடுத்துட்டு வாங்கப்பா எங்க சாமிகிட்ட வச்சு கொடுத்துடலாம் என்று சொல்ல அசோகனும் இதையெல்லாம் போய் அத்தை கிட்ட சொல்லனும் என கிளம்பி வருகிறார். பிறகு சூர்யா டிரஸ் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த விஷயத்தை சொல்ல அனைவரும் கடுப்பாகின்றனர். அதுவும் நந்தினிக்கு புடவை எடுத்திருக்கான் பாரு பளபளப்பா இருக்கு என்று சொல்ல, இவ்வளவு பண்ற சூர்யா இந்த வீட்டையும் அவ பேருல எழுதி வச்சுட்டா என்ன பண்றது. அவ இந்த வீட்டுக்கு பழகிட கூடாது ஏதாவது பண்ணனும் என்று மாதவி சொல்லுகிறார்.
மறுபக்கம் சீர்வரிசை தட்டை பார்த்த அருணாச்சலம் எதுக்காக சிங்காரம் இதெல்லாம் என்று கேட்க என் புள்ளையை எவ்வளவு பெரிய பிரச்சனையிலிருந்து காவந்து பண்ணி இருக்கீங்க உங்களுக்காக எவ்வளவு வேணா செய்யலாம் என்று சொல்லுகிறார். சூர்யா தட்டை வாங்கும் போது காலில் விழப்போக சிங்காரம் என்னையா பண்றீங்க இதெல்லாம் வேணாம் நீங்க போய் என் காலில் விழலாமா என கேட்க நந்தினியும் வேண்டாம் என்று சொல்லுகிறார். நீ மட்டும் எங்க டாடி கால விழுந்து ஆசீர்வாதம் வாங்கினல்ல நான் ஏன் வாங்க கூடாது என்று சொல்ல, அருணாச்சலமும் ஏன் சிங்காரம் அப்படி சொல்ற குணத்துல உயர்ந்து இருந்தா போதும் என்று சொல்ல சிங்காரம் சீர்வரிசை தட்டை கொடுத்து மோதிரத்தை சூர்யாவின் விரலில் போட்டு விடுகிறார்.
மோதிரம் எனக்காக பண்ண மாதிரியே இருக்கு என்று சொன்ன உங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கா மாமா என்று கேட்க எனக்கு மோதிரம் ஓகே தான். ஆனா உன்ன ரொம்ப புடிச்சிருக்கு என்று சொல்ல அப்ப என்ன என்று புனிதா கேட்கிறார் உங்க எல்லாரையும் ரொம்ப புடிச்சிருக்கு எல்லாருக்கும் ஹாப்பி தீபாவளி என்று சொல்லுகிறார் உடனே சிங்காரம் இந்த டிரஸ் எல்லாம் பூஜை ரூமில் இருக்கட்டும் நாங்க காலையில் குளிச்சிட்டு போட்டுகிறோம் என்று சொல்ல உங்க விருப்பம் சிங்காரம் என அருணாச்சலம் சொல்லுகிறார் சரி வாங்க எல்லாரும் சாப்பிட போகலாம் என்று சொல்ல, நந்தினி நான் எடுத்து வைக்கிறேன் என்று சொல்ல நீ எதுவும் பண்ண வேண்டாம் உங்க குடும்பத்துடன் நீ சந்தோஷமா உட்கார்ந்து சாப்பிடு கல்யாணம் பார்த்துப்பாங்க என்று சொல்லி அழைத்து வருகிறார். கல்யாணம் பரபரப்பாக இருக்க நானும் தங்கச்சியும் கெட்டி உருண்டை செய்யலாம்னு பிளான் பண்ணும் ஆனா அது சரியா வரல அதுக்காக தான் நந்தினி கிட்ட கேட்கலாம்னு இருந்தேன் என்று சொல்லுகிறார். அதெல்லாம் அப்புறம் செய்யலாம் நம்ம முதல்ல சாப்பிடலாம் என சொல்லி சாப்பாடு எடுத்து வைக்க நந்தினி குடும்பத்தினர் கீழே உட்கார சூர்யா மேலே எழுந்து உட்கார சொல்லுகிறார். அவர்கள் உட்கார தயங்க சூர்யா நீங்க உட்காரவில்லை என்றால் நான் கீழே உட்கார்ந்துகிறேன் என உக்கார அருணாச்சலம் முதல்ல எல்லாரும் எழுந்து மேல வந்து உட்காருங்க வாங்க என கூப்பிடுகிறார்.
பிறகு வேறு வழி இல்லாமல் நந்தினி குடும்பத்தினர் டைனிங் டேபிளில் உட்கார நந்தினி மற்றும் கல்யாணம் இருவரும் இலை போடுகின்றனர் உடனே சூர்யா நந்தினியை அழைத்து சேரில் உட்காரச் சொல்ல நந்தினி வர மறுக்கிறார்.பிறகு கட்டாயமாக உட்கார வைத்து நந்தினிக்கும் இலை போடுகிறார் பிறகு சூர்யா மற்றும் கல்யாணம் இருவரும் சாப்பாடு பரிமாறுகின்றனர். பிறகு நந்தினி மீண்டும் எழுந்திருக்க போக நீ சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் எழுந்திருக்கவே கூடாது என்று சொல்லிவிடுகிறார் இப்படி எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டால் இவ்வளவு அழகா இருக்கும் கீழ கொஞ்சம் பெரு மேல கொஞ்சம் பேர் சாப்பிட்டா நல்லாவா இருக்கும் என்று சொல்லி சூர்யா அனைவருக்கும் சாப்பாடு கேட்டு பரிமாறுகிறார். இவர்கள் சாப்பிடுவதை அசோகன் கவனிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி பார்த்துவிட்டு சூர்யா நந்தினி சூர்யா இருக்கும் போட்டோவின் முன் நின்று உங்க அப்பா எது பண்ணாலும் சூப்பரா இருக்கு நந்தினி இந்த கிப்ட் எவ்வளவு அழகா இருக்கு என்று சுந்தரவல்லி முன் காட்டிக் காட்டி வெறுப்பேத்துகிறார். முதல்ல கிச்சன்ல வந்தாங்க அதுக்கு அப்புறம் பூஜை ரூம் இப்போ டைனிங் டேபிள் இங்கேயே டேரா போட்ருவாங்க போல என்று சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். எங்க குடும்பத்துக்காக உங்க அம்மா கிட்ட பேசினீங்களா இல்ல உங்க வெறுப்பேத்தணும்ன்றதுக்காக செஞ்சீங்களா என்று கேட்க சூர்யா எதுவும் பேசாமல் சிறிய சிரிப்புடன் அமைதியாக இருக்கிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…